/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவி, மகன் மாயம்: கணவன் போலீசில் புகார்
/
மனைவி, மகன் மாயம்: கணவன் போலீசில் புகார்
ADDED : ஜன 27, 2024 12:46 AM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே காணாமல் போன மனைவி மற்றும் மகனை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த நாககுப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி ரம்யா,22; இருவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், தற்போது 3 வயதில் பவன்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. கணவன் பாலமுருகனுக்கும் மனைவி ரம்யாவும் கடந்த சில மாதங்களாக பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி காலை 11 மணியளவில் ரம்யா மற்றும் அவரது மகன் பவன்குமார் ஆகியோர் திடீரென மாயமாகினர். இதனால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன் காணாமல் போன மனைவி மற்றும் மகனை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் பாலமுருகன் கொடுத்துள்ள புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

