ADDED : ஜன 17, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : அவிரியூரில் வயிற்று வலியால் அவதியடைந்த பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரிஷிவந்தியம் அடுத்த அவிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி ஜெயலட்சுமி, 33; இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி ஏற்பட்டதால் ஜெயலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த ஜெயலட்சுமியின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அவரது தாய் ராமாயி அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

