/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுபான்மையினர் கடனுதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
சிறுபான்மையினர் கடனுதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறுபான்மையினர் கடனுதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறுபான்மையினர் கடனுதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 22, 2024 11:21 PM
காஞ்சிபுரம் : தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில், தனி நபர், சுயஉதவி குழுக்கள், சிறு தொழில், கைவினை கலைஞர்கள், கல்வி, ஆகிய கடனுதவி வழங்கப்படுகிறது.
இந்த கடனுதவி பெறுவதற்கு, நகர்ப்புறத்தில் வசிப் போருக்கு, 1.20 லட்ச ரூபாய் மற்றும் கிராமப் புறத்தில் வசிப்போ ருக்கு, 98,000 ரூபாய் குடும்ப வருமானம் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு, 6 சதவீதம். ஆண்களுக்கு, 8 சதவீதத்தில், 20 - 30 லட்சம் ரூபாய் வரையில் கடனுதவி வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும், சிறு பான்மை இனத்தவர்கள், உரிய ஆவணங்களுடன் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.