/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரும்புலியூர் - கிளாம்பாக்கம் பஸ் இயக்க கோரிக்கை
/
அரும்புலியூர் - கிளாம்பாக்கம் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஜூன் 08, 2024 06:09 AM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் பிர்காவில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஒன்றியத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ளன.
குறிப்பாக பழவேரி, அரும்புலியூர், கரும்பாக்கம், மாம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவர, போதியளவு பேருந்து சேவை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, திருவானைக்கோவில் கிராம வாசிகள் கூறியதாவது:
செங்கல்பட்டில் இருந்து மெய்யூர், விச்சூர் வழியாக, அரும்புலியூர் வரை இயக்கப்பட்ட தடம் எண்: 129 என்ற அரசு பேருந்து, கடந்த சில மாதங்களாக அறிவிப்பு ஏதுமின்றி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
பேருந்து நிறுத்தம் காரணமாக, இப்பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவ - மாணவியர் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, அரும்புலியூர் பிர்கா உட்பட்ட கிராமங்கள் ஒருங்கிணைத்தபடி, கிளாம்பாக்கம் வரை அரசு பேருந்து இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.