/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்டான்லியில் சாப்பாடு சரியில்லை; விசாரணை கைதிகள் திடீர் போராட்டம்
/
ஸ்டான்லியில் சாப்பாடு சரியில்லை; விசாரணை கைதிகள் திடீர் போராட்டம்
ஸ்டான்லியில் சாப்பாடு சரியில்லை; விசாரணை கைதிகள் திடீர் போராட்டம்
ஸ்டான்லியில் சாப்பாடு சரியில்லை; விசாரணை கைதிகள் திடீர் போராட்டம்
ADDED : ஜூலை 22, 2024 11:42 PM
சென்னை : சென்னை, ராயபுரத்தில் அமைந்துள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் 6வது மாடியில் கைதிகள் வார்டு உள்ளது. இங்கு, ஆண் கைதிகளுக்கு 20 படுக்கைகளும், பெண் கைதிகளுக்கு 10 படுக்கை வசதிகளும் உள்ளன.
தற்போது புழல் சிறை கைதிகள் 21 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில், மருத்துவமனை வழங்கும் உணவு சரியில்லை எனக்கூறி, நேற்று முன்தினம், அவர்கள்போராட்டம் நடத்தினர்.
மருத்துவமனை நிர்வாகத்தினர் நடத்திய பேச்சையடுத்து, போராட்டத்தை கைவிட்டு உணவை சாப்பிட்டனர். இந்த சம்பவம் குறித்து, ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், காலையில் இட்லி அல்லது பொங்கல் உடன் சாம்பாரும், மதிய உணவாக பொரியல், கூட்டுடன் சைவ சாப்பாடும், இரவில் கிச்சடியும் வழங்கப்படுகிறது.
இடைப்பட்ட நேரத்தில் முற்பகல் ரொட்டி, பால், முட்டையும்; மாலை அவித்த சுண்டலும் வழங்கப்படுகிறது. பரிசோதிக்கப்பட்டபின், நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதில் எந்த குறையும் இதுவரை ஏற்படவில்லை.
கைதிகளில் சிலர், பழங்கள், அசைவ உணவு வகைகள் வேண்டும் என கோஷம் எழுப்பினர். பாதுகாப்பிற்கு வந்த காவல் துறையினரும் செய்வதறியாது இருந்தனர். இது குறித்து சிறை துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் முருகேசனிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.