/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செடி, கொடிகள் மண்டிய கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
செடி, கொடிகள் மண்டிய கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
செடி, கொடிகள் மண்டிய கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
செடி, கொடிகள் மண்டிய கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2024 11:06 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாயார் குளம் சாலையோரம் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மூன்றடி ஆழமுள்ள இக்கால்வாயில் மண்துகள் நிறைந்துள்ளதால், தற்போது, முக்கால் அடி ஆழம் மட்டுமே உள்ளது.
மேலும் கால்வாயில் செடி, கொடிகள் புதர்மண்டியுள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது. இதனால், மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், கால்வாய் ஒட்டியுள்ள வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்து விடுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, கால்வாயில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்றி, கால்வாயின் முழு ஆழமான மூன்றடிக்கும் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.