/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜூன்- 30ல் சிறப்பு கிராம சபை கூட்டம்
/
ஜூன்- 30ல் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஜூன் 22, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சிஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், ஜூன்- 30ம் தேதி காலை 11:00 மணி அளவில், சிறப்பு கிராம சபைகூட்டம் நடைபெறஉள்ளது.
இந்த கூட்டத்தில், தொகுப்பு வீடுகள் மறுசீரமைப்பு, கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு செய்தல், புதிய வீடு கட்ட விடுபட்டோர் மனு அளிக்கலாம் என, அரசு தெரிவித்து உள்ளது.
இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்குரிய ஏற்பாடுகளை அந்தந்த ஊராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்சுற்றறிக்கை அனுப்பிஉள்ளனர்.