/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'பகலில் கடிக்கும் கொசுக்களை எளிதாக கட்டுப்படுத்தலாம்' காஞ்சி சுகாதார துறையினர் எச்சரிக்கை

ADDED : ஜூன் 08, 2024 06:14 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகர் மற்றும் கிராமப்புறங்களில், மாலை நேரங்களில் வீடுகளின் ஜன்னல், கதவு அடைப்பது வழக்கமாக உள்ளது. இது, கொசு வராமல் தடுக்கும் புதிய யுத்தியாகும். பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்கள், 'ஆர்மிஜிரஸ்' கொசு வகையாகும்.
இந்த கொசுக்கள், மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை கடிக்கும். இது, மற்ற கொசுக்களை காட்டிலும், அளவில் பெரிதாக காணப்படும். இந்த கொசு கடித்தால், வலி அதிகமாக ஏற்படும்.
இவை, நோய் பரப்பும் கொசுக்கள் இல்லை. இருப்பினும், இந்த கொசுக்கள் உருவாவதை, முற்றிலும் தடுப்பது நம் கடமை. இதன் மூலம் உருவாகும் நோய்களை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் செந்தில் கூறியதாவது:
ஆர்மிஜிரஸ் கொசு வகை, கழிவுநீர் தேங்குமிடங்களில் உற்பத்தியாகும் பெரிய அளவு கொசு. இது, செப்டிக் டேங்க் ஓட்டை வழியாக சென்று, பல ஆயிரம் முட்டைகள் இடும் தன்மை உடையது.
இதை கட்டுப்படுத்த, செப்டிக் டேங்க் பகுதியை சுற்றிலும் ஏதேனும் ஓட்டைகள் இருந்தால், அதை அடைக்க வேண்டும். செப்டிக் டேங்க் காற்று போக்கியின் முனையை, சாக்கு பை, லைலான் வலை ஆகியவற்றால் கட்ட வேண்டும்.
வீடுகள் அருகே கழிவுநீர் தேங்கியிருந்தால், அந்த கழிவுநீரை காய்கறி தோட்டத்திற்கு உபயோகமாக பயன்படுத்தலாம். இல்லையெனில், மண்ணெண்ணெய் மற்றும் பிற எண்ணெய் வகைகளை ஊற்றி கட்டுப்படுத்தலாம். இதை வீடுகள், வணிக கடைகள் என, அனைத்து இடங்களிலும் கடைப்பிடிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.