/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் எழுத, படிக்க தெரியாதோர் 7,081 பேர்! 426 மையங்களில் பயிற்சி அளிக்க முடிவு
/
காஞ்சியில் எழுத, படிக்க தெரியாதோர் 7,081 பேர்! 426 மையங்களில் பயிற்சி அளிக்க முடிவு
காஞ்சியில் எழுத, படிக்க தெரியாதோர் 7,081 பேர்! 426 மையங்களில் பயிற்சி அளிக்க முடிவு
காஞ்சியில் எழுத, படிக்க தெரியாதோர் 7,081 பேர்! 426 மையங்களில் பயிற்சி அளிக்க முடிவு
ADDED : ஜூன் 24, 2024 05:38 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் எழுத, படிக்க தெரியாதவர்கள், 7,081 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டது. அவர்களுக்கு, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின்கீழ், 426 கற்போர் மையங்கள் அமைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஆண்களை காட்டிலும், பெண்களே அதிகம் படிக்காதவர்களாக உள்ளனர் என, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு கல்வி கற்று கொடுக்க, 426 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
விழிப்புணர்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை வாயிலாக, மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கணக்கெடுப்பு, 2022ல் நடந்தது.
இந்த கணக்கெடுப்பு பணியில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், வட்டார மைய மேற்பார்வையாளர்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
இதில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், ரேஷன் கடை, பள்ளிகளில் மாணவர்கள் ஆகியோரின் தகவல் அடிப்படையில், 2022- - 23 மற்றும் 2023- - 24 ஆகிய இரு நிதி ஆண்டுகளிலும், 14,708 பேர் எழுதவும், படிக்கவும்தெரியாதவர்களாக உள்ளனர்.
அவர்களுக்கு, கற்போர் மையம் சார்பில், தினமும் இரண்டு மணி நேரம் என, 200 பயிற்சி வகுப்புகள், ஆறு மாத காலத்திற்கு, தன்னார்வலர்கள் வாயிலாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த பயிற்சி முடித்தவுடன், அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. அவர்களுக்கு, 426 இடங்களில் பயிற்சி அளிப்பதற்கான மையங்கள் அமைக்கப்பட்டு, 426 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்திட்டத்தில், அடிப்படை கல்வி அறிவு, எண்ணறிவு, சிக்கலான வாழ்க்கை திறன்கள், நிதியில் கல்வியறிவு, குழந்தைகள் பராமரிப்பு, கல்வி சுகாதார பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தொடர்ந்து, 2024- - 25ம் கல்வி ஆண்டில் எழுத, படிக்க தெரியாத வயது வந்தோர் கணக்கெடுப்பு பணி, ஐந்து வட்டாரங்களில், கடந்த மே மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில், 7,081 பேர் எழுத, படிக்க தெரியாமல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.
குறிப்பாக, உத்திரமேரூர் தாலுகாவில், 1,794 பேர், வாலாஜாபாதில் 1,458, காஞ்சிபுரம் தாலுகாவில், 1,356, ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், 1,253, குன்றத்துார் தாலுகாவில் 1,220 என, மொத்தம், 7,081 பேர் படிக்க தெரியாதவர்கள் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
நடவடிக்கை
இவர்களுக்கு, 426 மையங்கள் வாயிலாக, 426 தன்னார்வலர்கள் எழுத, படிக்க சொல்லிக் கொடுக்க உள்ளனர் என, கல்வித் துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,008 பெண்கள், 1,073 ஆண்கள் என, மொத்தம், 7,081 நபர்கள் எழுத, படிக்க தெரியாதவர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு, 426 மையங்கள் வாயிலாக, 426 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலமாக எழுத, படிக்க சொல்லி தருவதன் வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டம் படிப்பறிவு இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.