/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் முதற்கட்ட கலந்தாய்வு 12ல் துவக்கம்
/
உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் முதற்கட்ட கலந்தாய்வு 12ல் துவக்கம்
உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் முதற்கட்ட கலந்தாய்வு 12ல் துவக்கம்
உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் முதற்கட்ட கலந்தாய்வு 12ல் துவக்கம்
ADDED : ஜூன் 10, 2024 04:47 AM
காஞ்சிபுரம் : உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024 - -25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் 12ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் முனைவர் சுகுமாரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024- - 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை மறுதினம், காலை 9:30 மணிக்கு துவங்குகிறது.
இதில், பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு தகுதி மதிப்பெண் 400 லிருந்து 272 வரை உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
வரும் 13ம் தேதி காலை 9:30 மணிக்கு பி.காம்., வணிகவியல் பாடப்பிரிவிற்கு தகுதி மதிப்பெண் 400 லிருந்து 246 வரை உள்ளவர்களுக்கும், வரும் 14ம் தேதி காலை 9:30 மணிக்கு பி.ஏ., தமிழ் பாடப்பிரிவில் சிறப்பு தமிழ் பயின்ற அனைவருக்கும், பொதுத்தமிழில் 100 முதல் 71 மதிப்பெண் வரை பெற்றவர்களும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
காலை 11:00 மணிக்கு பி.ஏ., ஆங்கிலம் பாடப்பிரிவுக்கு தகுதி மதிப்பெண் 100 முதல் 42 வரை உள்ள இக்கல்லுாரிக்கு விண்ணப்பித்த மாணவ - -மாணவியர் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கலந்தாய்வில் பங்கேற்போர் இணையவழி விண்ணப்பம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் மூலச்சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், ஜாதி, வருமான சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி புத்தகம் மற்றும் மேற்கண்ட சான்றிதழ்களின் இரு நகல்கள் மற்றும் 3 புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவர்களது மொபைல்போன், வாட்ஸாப் மற்றும் இணைய வழியிலும் தகவல் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் விபரங்களுக்கு www.gascuthiramerur.ac.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.