/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வைகுண்ட பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு
/
வைகுண்ட பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு
வைகுண்ட பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு
வைகுண்ட பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு
ADDED : ஜூன் 11, 2024 02:11 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பரத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள் நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார்.
இதில், மூன்றாம் நாள் உற்சவமான கடந்த 3ம் தேதி காலையில், கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகன உற்சவமும், ஏழாம் நாள் பிரபல உற்சவமான கடந்த 7ம்தேதி காலை தேரோட்டமும் விமரிசையாக நடந்தது. இதில், ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை பல்லக்கும், தொடர்ந்து தீர்த்தவாரியும், இரவு முகுந்த விமான உற்சவமும் நடந்தது.
நேற்று காலை சாந்தி திருமஞ்சனம் மற்றும் சப்தாவரணத்துடன் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.