/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கருட வாகனத்தில் வரதாபுரம் சீனிவாசர்
/
கருட வாகனத்தில் வரதாபுரம் சீனிவாசர்
ADDED : ஜூன் 22, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றி யம், வரதாபுரம் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில், நடப்பாண்டிற்கான ஆனி மாதம் உற்சவ விழா நேற்று துவங்கியது.
விழாவின் துவக்க நிகழ்ச்சியாக காலை 7:00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி அப்பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதை தொடர்ந்து,காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனமும் மற்றும் ஊஞ்சல் சேவையும் நடந்தது.
அப்போது, மலர் அலங்காரத்தில் அருள்பாளித்த சீனிவாச பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.