/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டிரான்ஸ்பார்மரில் மோதிய பஸ் உயிர் தப்பிய 20 ஊழியர்கள்
/
டிரான்ஸ்பார்மரில் மோதிய பஸ் உயிர் தப்பிய 20 ஊழியர்கள்
டிரான்ஸ்பார்மரில் மோதிய பஸ் உயிர் தப்பிய 20 ஊழியர்கள்
டிரான்ஸ்பார்மரில் மோதிய பஸ் உயிர் தப்பிய 20 ஊழியர்கள்
ADDED : பிப் 06, 2024 12:35 AM
காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வேதாச்சலம். இவர், ஸ்ரீபெரும்புதுார் பகுதியிலுள்ள தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும், ஒப்பந்த பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
வழக்கம் போல, தொழிற்சாலை பணியாளர்கள் 20 பேரை ஏற்றிக் கொண்டு, காஞ்சிபுரம் அருகேயுள்ள அய்யங்கார்குளம் கிராமம் வழியாக, நேற்று அதிகாலை 4:00 மணியளவில் பேருந்து வந்த போது, ஓட்டுனர் வேதாச்சலத்திற்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள மின்மாற்றி மீது உரசியபடி மோதி நின்றுள்ளது. இதில், பேருந்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளன.
அப்போது, மின்மாற்றியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பேருந்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினர்.
சிலருக்கு காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த காஞ்சி தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தோரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.