/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பினாயூர் சாலையில் பாலம் அமைக்க ரூ.2.63 கோடியில் அடிக்கல்
/
பினாயூர் சாலையில் பாலம் அமைக்க ரூ.2.63 கோடியில் அடிக்கல்
பினாயூர் சாலையில் பாலம் அமைக்க ரூ.2.63 கோடியில் அடிக்கல்
பினாயூர் சாலையில் பாலம் அமைக்க ரூ.2.63 கோடியில் அடிக்கல்
ADDED : ஜன 26, 2024 12:52 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 400 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் இருந்து தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய் உள்ளது.
இந்த நீர்வரத்து கால்வாய் இணைப்பாக பினாயூர் சாலையில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம், சில ஆண்டுகளாக சேதம் அடைந்து காணப்படுகிறது.
எனவே, இத்தரைப்பாலத்தை பெரிய பாலமாக உயர்த்தி கட்ட அப்பகுதி வாசிகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, பினாயூர் சாலை தரைப்பாலத்தை பெரிய பாலமாக கட்ட நபார்டு திட்டத்தின் கீழ், 2.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., -எம்.எல்.ஏ., சுந்தர் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, சீட்டணஞ்சேரி கிராம பேருந்து நிறுத்தத்தில், 4.40 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டிய பயணியர் நிழற்குடை கட்டடத்தை எம்.எல்.ஏ., சுந்தர் திறந்து வைத்தார்.
தி.மு.க., சாலவாக்கம் ஒன்றிய செயலர் குமார், மாவட்ட கவுன்சிலர் சிவராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

