/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழை பாதிக்கும் 72 இடங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
/
மழை பாதிக்கும் 72 இடங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
மழை பாதிக்கும் 72 இடங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
மழை பாதிக்கும் 72 இடங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 01, 2025 12:17 AM
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும். இருப்பினும், தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை மாதங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல நாட்கள் கனமழை பெய்வது வழக்கம்.
அதுபோன்ற நாட்களில், சென்னை புறநகர் பகுதிகளான, மாங்காடு, குன்றத்துார் மற்றும் காஞ்சிபுரம் நகரின் சில பகுதிகள் என, மழை, வெள்ள பாதிப்பு பகுதிகள் மோசமான நிலையில் பாதிப்பு ஆளாகின்றன.
அதுபோன்ற நிலையில், எப்படி கையாள வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை துறை கணக்கெடுப்பின்படி, மூன்று இடங்கள் மிக அதிக பாதிப்புக்கு ஆளாகும் இடங்களாகவும், 21 அதிக பாதிப்பு ஆளாகும் இடங்களாகவும், 26 இடங்கள் நடுத்தரமாகவும், 22 இடங்கள் குறைவாக பாதிக்கும் இடங்களாக என, மொத்தம் 72 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மழை பாதிப்பு இடங்களில் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியதாவது:
நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மழைநீர் வடிகால்கள், பாலங்கள், ஆகியவற்றை துார் வாரும் பணி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், விரிவுபடுத்துதல், உபரிநீர் கால்வாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவற்றை துார்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ள நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பேரூராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்
மேலும், துறைவாரியாக மேற்கொள்ளப்படும் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக சம்பந்தப்பட்ட, 11 துறை சார்ந்த அலுவலர்களிடம் விவாதிக்கப்பட்டு மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீட்பு நடவடிக்கைகள் விரைவில் முடிக்க வேண்டும்.
மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க வேண்டும்.
நீச்சல் தெரிந்தவர்கள், தன்னார்வலர்கள், தேசிய மாணவர் படையினர் என. அனைவரையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.