sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் திரைப்பட நகரம் தயாராகிறது

/

குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் திரைப்பட நகரம் தயாராகிறது

குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் திரைப்பட நகரம் தயாராகிறது

குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் திரைப்பட நகரம் தயாராகிறது


ADDED : ஜன 26, 2024 01:12 AM

Google News

ADDED : ஜன 26, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் சர்வதேச தரத்தில் நவீன திரைப்பட நகரம் அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை தமிழக அரசு துவக்கி உள்ளது.

நாட்டில், தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது, தென்னிந்திய மொழிகளில் பெரும்பாலான திரைப்படங்கள் சென்னையில் தயாரிக்கப்படுகின்றன.

இதை கருத்தில் கொண்டு, சென்னையில் தரமணியில் தமிழக அரசு திரைப்பட நகரத்தை உருவாக்கியது. இங்கு படப்பிடிப்புகளுடன், திரைப்படம் சார்ந்த படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

சென்னையில் திரைப்பட படப்பிடிப்புக்கு ஏற்ற தளங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன் சென்னை - பெங்களூரு சாலையில், செம்பரம்பாக்கம் அருகில் தனியார் நிறுவனம் சார்பில் திரைப்பட நகரம் துவக்கப்பட்டது.

இதையடுத்து, பெரும்பாலான திரைப்பட படபிடிப்புகள், டிவி நிகழ்ச்சி தயாரிப்பு உள்ளிட்ட பணிகள், இங்கு இடம் பெயர்ந்தன.

இந்நிலையில், 2023 - 24 பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, திரைப்படத் துறை மேம்பாட்டுக்கான 16 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், 'சென்னை புறநகரில், தனியார் பங்களிப்புடன் நவீன திரைப்பட நகரம் ஏற்படுத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான பூர்வாங்க பணிகள், தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் வாயிலாக துவக்கப்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூரு சாலையில், திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில், புதிய திரைப்பட நகரத்துக்காக 152 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இங்கு திரைப்பட நகரம்அமைப்பதற்கான முழுமை திட்டத்தை தயாரிக்க கலந்தாலோசகர் தேர்வுக்கான அறிவிப்பை, தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us