/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடத்தில் கல்லுாரி மாணவரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது
/
ஒரகடத்தில் கல்லுாரி மாணவரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது
ஒரகடத்தில் கல்லுாரி மாணவரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது
ஒரகடத்தில் கல்லுாரி மாணவரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது
ADDED : பிப் 06, 2024 04:43 AM
ஒரகடம் : ஒரகடத்தில், கல்லுாரி மாணவரிடம் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரி நாவலுார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அருள் மகன் மனோஜ், 17, ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ., படித்து வருகிறார்.
கடந்த மாதம் 29ம் தேதி, தொழிற்பயிற்சி நிலையத்தின் வெளியில் நின்றிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், மனோஜிடமிருந்து 'ஓப்போ' ரக மொபைல் போனை பறித்து, அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து, மனோஜின் பெற்றோர், ஒரகடம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்படி, போலீசார் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த உமர் பரூக், 25, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.