/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒலிமுகமதுபேட்டையில் நிழற்கூரை வசதி தேவை
/
ஒலிமுகமதுபேட்டையில் நிழற்கூரை வசதி தேவை
ADDED : ஜன 26, 2024 12:47 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், ஒலிமுகமதுபேட்டை பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த நிறுத்தத்தின் வழியாக, வேலுார், திருப்பதி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, திருத்தணி, சென்னை, வேலுார், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் நின்று செல்கின்றன.
ஒலிமுகமதுபேட்டை பேருந்து நிறுத்தத்தில், பயணியர் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும், தற்காலிக பேருந்து நிறுத்தத்தில், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றியுள்ளனர்.
இதனால், பிரதான சாலை வளைவு ஓரங்களில் நிற்க வேண்டி உள்ளது. சாலையில் செல்லும் வாகனங்களும், பேருந்திற்கு காத்திருக்கும் நபர்கள் மீது மோதுவதை போல, அசுர வேகத்தில் செல்கின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில், பயணியர் நிழற்கூரை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

