/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தார்ப்பாய் மூடாமல் அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

ADDED : ஜூன் 30, 2025 11:57 PM

ஸ்ரீபெரும்புதுார், ஒரகடத்தில், பாதுகாப்பாற்ற முறையில், தார்ப்பாய் மூடாமல், அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களில் இருந்து விழும் பொருட்களால், பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 180க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும், மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவு பொருட்களை, டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர்.
அவ்வாறு, கழிவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில், அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்கின்றனர். அவை, வாகனங்களில் இருந்து சரிந்து சாலையில் விழுகின்றன.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் விழுந்துள்ள பொருட்களின் மீது ஏறி இறங்கி, நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.