/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 'அன்புக்கரங்கள்' திட்டம் 24 குழந்தைகளுக்கு நிதியுதவி
/
காஞ்சியில் 'அன்புக்கரங்கள்' திட்டம் 24 குழந்தைகளுக்கு நிதியுதவி
காஞ்சியில் 'அன்புக்கரங்கள்' திட்டம் 24 குழந்தைகளுக்கு நிதியுதவி
காஞ்சியில் 'அன்புக்கரங்கள்' திட்டம் 24 குழந்தைகளுக்கு நிதியுதவி
ADDED : செப் 15, 2025 10:56 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்த, 'அன்புக்கரங்கள்' திட்டத்தில், பெற்றோரை இழந்த, 24 குழந்தைகளுக்கு, கலெக்டர் கலைச்செல்வி, 2,000 ரூபாய் நிதியுதவிக்கான அடையாள அட்டையை வழங்கினார்.
பெற்றோரில் இருவரையும் இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தை இழந்து மற்றொருவரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு, மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும், 'அன்புக்கரங்கள்' திட்டம் செயல்படுத்தப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுதும் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று துவக்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், 'அன்புக்கரங்கள்' திட்டத்தின் கீழ், நிதியுதவி பெறும் குழந்தைகளுக்கு, நிதியுதவிக்கான அடையாள அட்டையை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
மாதந்தோறும் குழந்தைகளுக்கு 2,000 ரூபாய் இத்திட்டத்தின் மூலம், 18 வயது வரை வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ், 60 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
சென்னையில் நடந்த முதல்வர் நிகழ்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 36 குழந்தைகள் நிதியுதவிக்கான அடையாள அட்டையை பெற்றனர். மீதமுள்ள 24 குழந்தைகள், காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்வில் நிதியுதவிக்கான அடையாள அட்டையை பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தி.மு.க., - -எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், ஒன்றியக் ,குழு தலைவர் மலர்க்கொடி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் யசோதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.