/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிளாம்பாக்கத்தில் பயணியருக்கு உதவ 30 தன்னார்வலர்கள் நியமனம்
/
கிளாம்பாக்கத்தில் பயணியருக்கு உதவ 30 தன்னார்வலர்கள் நியமனம்
கிளாம்பாக்கத்தில் பயணியருக்கு உதவ 30 தன்னார்வலர்கள் நியமனம்
கிளாம்பாக்கத்தில் பயணியருக்கு உதவ 30 தன்னார்வலர்கள் நியமனம்
ADDED : ஜன 09, 2024 10:14 PM
செங்கல்பட்டு:கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர, வருவாய் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட சட்டம் - ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. எஸ்.பி., சாய் பிரணீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:
மிக்ஜாம் புயல், மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு, பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வருவர்.
அவர்களுக்கு, குடிநீர் மற்றும் பேருந்து செல்லும் இடங்கள் குறித்த தகவல்களை, தன்னார்வலர்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் எளிதில்செல்லும் வகையில், அனைத்து ஏற்பாடுகளையும், வண்டலுார் வருவாய்த்துறை மற்றும் காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பொங்கல் திருவிழாவையொட்டி, குடிநீர் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க, 30 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன் தெரிவித்தார்.

