/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ் இயக்க அரும்புலியூர் மக்கள் கோரிக்கை
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ் இயக்க அரும்புலியூர் மக்கள் கோரிக்கை
நிறுத்தப்பட்ட அரசு பஸ் இயக்க அரும்புலியூர் மக்கள் கோரிக்கை
நிறுத்தப்பட்ட அரசு பஸ் இயக்க அரும்புலியூர் மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 06, 2025 11:38 PM
அரும்புலியூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் இருந்து, கரும்பாக்கம், விச்சூர், சிதண்டிமண்டபம், மெய்யூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து தாம்பரம் வரை தடம் எண்;129ஏ, மற்றும் 129பி., ஆகிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
அரும்புலியூர், சீத்தாவரம், கரும்பாக்கம், சீட்டணஞ்சேரி, ராஜம்பேட்டை, திருவானைக்கோவில் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இப்பேருந்து வாயிலாக செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு பணி நிமித்தமாக சென்று வருவதை வழக்கத்தில் கொண்டிருந்தனர்.
மேலும், இப்பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் இந்த பேருந்துகள் வாயிலாக செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் சுற்றி உள்ள கல்வி கூடங்களுக்கு சென்று வர பயன்பாடாக இருந்தது.
இந்நிலையில், அறிவிப்பு ஏதுமின்றி இப்பேருந்தின் இயக்கம் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் போக்குவரத்து பிரச்னையால் அவதிப்படுவதாக அப்பகுதிவாசிகள் புகார் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து, அரும்புலியூர் பகுதியினர் கூறியதாவது:
அரும்புலியூர் - செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கமாக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து நிறுத்தம் குறித்து, செங்கல்பட்டு போக்குவரத்து பணிமனையில் பல முறை புகார் மனு அளித்துள்ளோம்.
இதுகுறித்து, உத்திரமேரூர் சட்டசபை தொகுதி உறுப்பினரிடத்திலும் முறையிட்டு உள்ளோம். எனினும் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே, நிறுத்தம் செய்த அரசு பேருந்தை மீண்டும் இயக்குவதோடு, அரும்புலியூரில் இருந்து, பழவேரி வரை நீடித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.