/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துாய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு
/
துாய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 21, 2025 10:13 PM
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் பேரூராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை உபயோகத்தினால் ஏற்படும் தீமைகள், ஆரம்பகால புற்றுநோய், பல் மற்றும் வாய்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா தலைமை வகித்தார்.
காசநோய் நல கல்வியாளர் பாபு சுதந்திரநாத், மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் மருத்துவர் ஸ்ரீராம் ஆகியோர், காசநோய் குறித்தும், புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்பு, ஆரம்பகால புற்றுநோய், பல் மற்றும் வாய்நலம் குறித்து, பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், பொது மற்றும் தனியார் காசநோய் ஒருங்கிணைப்பாளர் ராஜி, சுகாதார ஆய்வாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ஜோதி பிரகாசம் நன்றி கூறினார்.