/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 01, 2025 12:16 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றுதல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தொடங்கி வைத்து பேசினார். .அதைத் தொடர்ந்து, தமிழக சட்ட கல்வி துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில கமிஷனர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் எழுத்தாளர் ஆகியோர் பெண்ணெனும் படைப்பு, பாலின சமத்துவமே மானுட மேம்பாடு, தாய்தான் முதல் ஆசிரியர், சட்டத்தின் முன் ஆண், பெண் சமம் என்பதன் பொருள் என்ற தலைப்பில் பேசினார்.
வழக்கறிஞர்கள் பலரும், பணியிடங்களில் பாலியல் பலாத்காரம், பெண்களின் உரிமைக்குரலை நசுக்கும் கரங்களை தடுப்போம், அங்கீகார மீட்பு, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற ஆணாதிக்கத்தை அகற்றுவோம் என்ற தலைப்புகளில் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி செம்மல், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, எஸ்.பி., சண்முகம், தமிழக சட்ட கல்வி துறை இயக்குனர் விஜயலட்சுமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில கமிஷனர் இமயம் பங்கேற்றனர்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மாலதி, புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி தமிழ் பேராசிரியர் பட்டம்மாள், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பேராசிரியர் நஜ்மா உட்பட பலர் பங்கேற்றனர்.