/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குமரக்கோட்டம் கோவிலில் வரும் 26ல் பாலாலயம்
/
குமரக்கோட்டம் கோவிலில் வரும் 26ல் பாலாலயம்
ADDED : பிப் 23, 2024 11:01 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில், 12 அல்லது 13ம் நுாற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோவிலுக்கு, செவ்வாய், வெள்ளி, பரணி, கிருத்திகை, பூசம், சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில், ராஜகோபுர விமானத்திற்கான பாலாலயம் நாளை மறுநாள் காலை 9:00 மணிக்கு நடக்கிறது.
தொடர்ந்து, 25 லட்சம் ரூபாய் செலவில் கோபுரத்திற்கு, 'ஸ்கிராப்பிங்' பெயின்டிங் திருப்பணிகள் துவக்கப்பட உள்ளன என, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.