/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட 187 வீடுகள் முழு கணக்கெடுப்பு நடத்த கலெக்டர் உத்தரவு

ADDED : ஜன 16, 2024 11:16 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'மிக்ஜாம்' புயல் ஏற்படுத்திய வெள்ளம், பெருமழை காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பலரும் பாதிக்கப்பட்டனர். பயிர் பாதிப்பு, வீடுகள் இடிந்தது என பல வகையில் பாதிப்பு ஏற்பட்டது.
முதற்கட்டமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஐந்து தாலுகாக்களிலும், 83 குடிசைகள் முழுமையாகவும், எட்டு குடிசைகள் பகுதியளவும் சேதமாகியுள்ளன.
அதேபோல, 96 ஓட்டு வீடுகள் பகுதியளவு சேதம் என, மொத்தம் 187 வீடுகள் சேதமாகியுள்ளது தெரியவந்தது.
முழுமையாக சேதமான வீடுகளுக்கு 4 லட்சம் ரூபாயும், பகுதியளவு சேதமான வீடுகளுக்கு 2 லட்சம் ரூபாயும் அரசு வழங்குகிறது.
இதனால், சேதமான வீடுகளை புகைப்படத்துடன், பயனாளியின் முழுமையான விபரங்களை சேகரிக்க, வருவாய் துறையுடன் இணைந்து, ஊரக வளர்ச்சித் துறை பணி மேற்பார்வையாளர்கள் மேற்கொள்ள கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
சேதமான வீடுகள் பற்றி முழு விபரங்களை சேகரித்து, வரும் 19க்குள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாயிலாக அறிக்கை அனுப்ப வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.