/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை தடுப்பில் மோதி கன்டெய்னர் லாரி விபத்து
/
சாலை தடுப்பில் மோதி கன்டெய்னர் லாரி விபத்து
ADDED : ஜூன் 14, 2025 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து குன்றத்துார் செல்லும் சாலையில், கன்டெய்னர் லாரி நேற்று காலை சென்றது. குன்றத்துார் அருகே சிறுகளத்துார் பகுதியை கடந்தபோது, சாலையின் குறுக்கே உள்ள சாலை மைய தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஓட்டுனர் ரவிகுமார், 55, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில், லாரியின் முன் பகுதி சேதமானது. மேலும், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.
குன்றத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கிரேன் மூலம் கன்டெய்னர் லாரியை சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.