/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மாட்டு பொங்கல் கோலாகலம்
/
காஞ்சியில் மாட்டு பொங்கல் கோலாகலம்
ADDED : ஜன 16, 2024 11:06 PM

காஞ்சிபுரம், மாட்டு பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் விசாலமாக தெருக்கள் உள்ள பகுதியில் வசிக்கும் பெண்கள், தங்கள் வீட்டு வாசலில் நேற்று ரங்கோலி, நேர் புள்ளி, ஊடு புள்ளி, பிற புள்ளி கோலம் என, பல வடிவங்களில், வண்ண கோலமிட்டனர்.
இக்கோலங்களில் பெரும்பாலும் பசு, காளை, பொங்கல் பானை, கரும்பு, கொத்து மஞ்சள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது.
மாட்டு பொங்கலான நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள நிரந்தர கயிறு விற்பனை செய்யும் கடைகள் மற்றும் தற்காலிக நடைபாதை கடைகளில் மாடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் விற்பனை களை கட்டியது.
இந்த கடைகளில், மாடுகளுக்கு தேவையான மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு, நெற்றி கயிறு என, பல வண்ணங்களில் கயிறுகள் மற்றும் சலங்கையுடன் இணைந்த கயிறுகள் குவிக்கப்பட்டு இருந்தன.
தரம் டிசைனுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ஒரு கயிறு, 50 - 550 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்தில் மாடு வளர்ப்போர், மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளை கூர்மையாக்கி, அழகான வர்ணம் தீட்டி அதில், சலங்கை, பலுான்களையும் அலங்காரமாக கட்டி தொங்கவிட்டனர்.
மாட்டிற்கு மஞ்சள் குங்குமத்துடன், நெற்றியில் விபூதியில் பொட்டு வைத்து, புதிய மூக்கணாங்கயிறும், கழுத்தில் மாலை அணிவித்தனர்.
சுவாமிக்கு படையலிட்ட பொங்கலை மாட்டிற்கு வழங்கி பக்தியுடன் வணங்கி, மாட்டு பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

