/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மருத்துவமனையில் குடிநீரின் தரம் பரிசோதனை
/
காஞ்சி மருத்துவமனையில் குடிநீரின் தரம் பரிசோதனை
ADDED : ஜூன் 07, 2025 01:16 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, மருத்துவ இணை இயக்குனரகத்தின், மாநில மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி துறையின் இணை இயக்குனர் மருத்துவர் இளங்கோ ஆய்வு செய்தார்.
இதில், டயாலிசிஸ் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஆர்.ஓ., இயந்திரத்தில் வரும் குடிநீரின் தரத்தை டி.டி.எஸ்., கருவி வாயிலாக சோதித்தார். அதில், குடிப்பதற்கு ஏற்ப ‛நார்மல்‛ அளவில் இருப்பதை உறுதி செய்தார்.
மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த டயாலிசிஸ் பாசிட்டிவ் பிரிவில் உள்ள மருத்துவ உபகரணங்கள் செயல்பாட்டில் உள்ளது எத்தனை, பழுதடைந்தவை எத்தனை என்பதை சோதித்து குறிப்பெடுத்து கொண்டார்.
மருத்துவமனைக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு சிகிச்சை எடுப்பவர்கள், குறிப்பிட்ட காலத்தில் முறையாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை செய்துகொள்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என, மருத்துவனை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மருத்துவமனை சுகாதார பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் ஹிலாரினா ஜோஷிகா நளினி, கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் பாஸ்கர், மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.