/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கீழ்ஒட்டிவாக்கம் ஏரியை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
/
கீழ்ஒட்டிவாக்கம் ஏரியை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
கீழ்ஒட்டிவாக்கம் ஏரியை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
கீழ்ஒட்டிவாக்கம் ஏரியை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 16, 2025 12:33 AM

கீழ்ஒட்டிவாக்கம்;தாமரை இலை, கடற்பாலை செடிகள் வளர்ந்துள்ள கீழ்ஒட்டிவாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், கீழ்ஒட்டிவாக்கம் ஏரி நீரை பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது, ஏரியில் தாமரை இலைகள், கடற்பாலை செடிகள் வளர்ந்து வருவதால் நீர்பிடிப்பு பகுதி வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால், வடகிழக்கு பருவமழைக்கு ஏரி முழுமையாக நிரம்பினாலும் குறைந்த அளவு தண்ணீரே சேகரமாகும் நிலை உள்ளது.
எனவே, ஏரியில் காடுபோல வளர்ந்துள்ள கடற்பாலை செடிகளையும், தாமரை இலைகளையும் அகற்றி, மண் திட்டுகளால் துார்ந்த நிலையில் உள்ள ஏரியை துார் வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழ்ஒட்டிவாக்கம் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.