/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : செப் 18, 2025 11:02 PM
இருங்காட்டுக்கோட்டை:ஹுண்டாய் கார் தொழிற்சாலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள், நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ஹுண்டாய் கார் உற்பத்தி தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு, மூன்று ஷிப்டுகளில், 2,000த்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம், தொழிற்சாலையின் ஆதரவில் இயங்குவதாக கூறப்படும் 'யுனைடெட் யூனியன்' தொழிற்சங்கம் மூலம் அண்மையில் கையெழுத்தானது.
இந்நிலையில், ஊதிய உயர்வு குறித்து, தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தொழிற்சாலையில் பெரும்பான்மை சங்கத்தை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.