/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
/
உத்திரமேரூர் மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
ADDED : செப் 19, 2025 02:25 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தீயணைப்பு துறை சார்பில், உத்திரமேரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு ஒத்திகையை நிகழ்த்தி காட்டினர்.
அதில், மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், துாய்மை பணியாளர்கள், பொதுமக்கள் முன்னிலையில் மின்கசிவு மற்றும் காஸ் சிலிண்டர் மூலம் ஏற்படும் தீ விபத்துகளில் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும் என விளக்கப்பட்டது.
மேலும், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் ஏற்படும் தீ விபத்துகளில், தீ பரவாமல் தடுக்கும் வழிகள் குறித்து விவரித்து கூறப்பட்டது.
அதை தொடர்ந்து, தீ விபத்தின்போது புகையால் மயக்கம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் காட்டினர்.