sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 'மிக்ஜாம்' பாதிப்பு பகுதிகளில் வெள்ள தடுப்பு பணி ரூ.324 கோடியில்! ;  4 மாவட்டங்களில் அக்டோபரில் முடிக்க இலக்கு

/

 'மிக்ஜாம்' பாதிப்பு பகுதிகளில் வெள்ள தடுப்பு பணி ரூ.324 கோடியில்! ;  4 மாவட்டங்களில் அக்டோபரில் முடிக்க இலக்கு

 'மிக்ஜாம்' பாதிப்பு பகுதிகளில் வெள்ள தடுப்பு பணி ரூ.324 கோடியில்! ;  4 மாவட்டங்களில் அக்டோபரில் முடிக்க இலக்கு

 'மிக்ஜாம்' பாதிப்பு பகுதிகளில் வெள்ள தடுப்பு பணி ரூ.324 கோடியில்! ;  4 மாவட்டங்களில் அக்டோபரில் முடிக்க இலக்கு


ADDED : பிப் 06, 2024 04:55 AM

Google News

ADDED : பிப் 06, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புகழ் கமிட்டி பரிந்துரைப்படி, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கு 324 கோடி ரூபாயை நீர்வள ஆதாரத் துறை ஒதுக்கியுள்ளது. அத்துடன் 'மிக்ஜாம்' புயல் மழை பாதிப்புகளை சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகளை விரைவில் துவக்கி, வரும் அக்டோபருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதிக சேதங்களை சந்தித்து வருகின்றன.

இம்மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பிற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில், அரசால் குழு அமைக்கப்பட்டது.

பரிந்துரை


இக்குழுவினர் வழங்கிய பரிந்துரைப்படி நகராட்சி நிர்வாகம், நீர்வளம், நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் வாயிலாக மழைநீர் கால்வாய், சிறுபாலம், ரெகுலேட்டர்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக, 10,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவிட்டுள்ளது. ஆனால், 2023 டிசம்பரில், 'மிக்ஜாம்' புயலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டது.

தென் சென்னை பகுதிகளில் வெள்ளநீர் வடிவதற்கு 15 நாட்களுக்கும் மேலானது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் திருப்புகழ் குழுவினர் மீண்டும் ஆய்வு செய்து, சில பரிந்துரைகளை வழங்கினர்.

'மிக்ஜாம்' புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பை சரி செய்யவும், பிற வகையான வெள்ள தடுப்பு பணிகளை செய்யவும் நீர்வள ஆதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதை செயல்படுத்தும் வகையில், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ள, சென்னை மண்டல நீர்வளத் துறைக்கு, 324 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதியில், தென் சென்னையின் செம்பாக்கம் உபரிநீர் கால்வாயில் இருந்து நன்மங்கலம் ஏரி வரை, 24.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வெள்ள தடுப்புச் சுவர் கட்டப்பட உள்ளது.

மூவசரம்பேட்டை ஏரி முதல் கீழ்க்கட்டளை கால்வாய் வரை, 30.6 கோடியில் மூடுகால்வாய், நாராயணபுரம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை, 39.8 கோடியில் இரண்டு வழி சிறு கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

நிதி ஒதுக்கீடு


நேமம் ஏரியில் உபரிநீர் கால்வாய் ரெகுலேட்டர் மற்றும் சேதமடைந்த கரை சீரமைப்புக்கு 12.2 கோடி ரூபாய், புரசைவாக்கம் அருகே கூவம் கரை சீரமைப்பு பணிகள் 17.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணியாற்றின் பல்வேறு இடங்களில் சேதமடைந்த கரைகளை சீரமைக்கும் பணிகள், 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அடையாற்றின் கால்வாயை ஆழப்படுத்துவது, சென்னை புறநகர் சோழவரம், செங்குன்றம் ஏரிகளை சீரமைப்பது, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணியாற்றின் பல்வேறு இடங்களில் கரைகளை சீரமைப்பது, செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று இடங்களில் மூடு கால்வாய் அமைப்பது உள்ளிட்ட பணிகளை, நீர்வள ஆதாரத் துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.

இதில், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தாலுகாவில், 65.8 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று இடங்களில் தரைக்கு கீழ் பள்ளம் தோண்டப்பட்டு, கான்கிரீட்டால் ஆன மூடு கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக ஒப்பந்ததாரரை தேர்வு செய்து, கட்டுமான பணிகளை துவங்க நீர்வளத்துறை ஏற்பாடுகளை துவங்கியுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நீர்வள ஆதாரத்துறை அதிகாரி கூறியதாவது:

செங்கல்பட்டு தாலுகாவில் மூன்று இடங்களில் மூடுகால்வாய் அமைக்கப்பட உள்ளது. ஒரு ஏரிக்கும் பிற ஏரிக்கும் இடையே இணைப்பு ஏற்படுத்தி மழைநீர் வடிய வைக்கவே இத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. 'டெண்டர்' நிலையில் உள்ள இப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-------------------------------------------------நீர்வள ஆதாரத்துறை மேற்கொள்ள உள்ள பணிகள் விபரம் - நிதி ஒதுக்கீடு கோடி ரூ.

தென் சென்னை நாராயணபுரம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை மூடுகால்வாய் 39.8மூவசரம்பட்டு ஏரி முதல் கீழ்கட்டளை கால்வாய் வரை மூடுகால்வாய் 30.6செம்பாக்கம் ஏரி அருகே, மழைநீர் வடிய மூடு கால்வாய் 24.2தாம்பரம் தர்காஸ் சாலை முதல் அடையாறு ஆறு வரை மூடு கால்வாய் 11.0புரசைவாக்கம் கூவம் ஆற்றின் வடக்குப்பகுதி சீரமைப்பு 17.3ஏர்போர்ட் ரன்வே முதல் மியாட் பிரிட்ஜ் இடையே, அடையாற்றில் வெள்ள தடுப்பு சுவர் 23.5செங்குன்றம் ஏரியின் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுதல் 11.1செங்குன்றம் ஏரி உபரி நீர் தடத்தில் வெள்ளத்தடுப்பு சுவர் 8.8சேக்காடு ஏரி மதகு உள்ளிட்ட பணிகள் 4.7திருவொற்றியூர் கொசஸ்தலையாறு, வடக்கு பகிங்ஹாம் கால்வாயுடன் இணையும் பகுதி சீரமைப்பு 4.0திருவள்ளூர் ஆரணியாற்று கரை சீரமைப்பு, புதிதாக அமைத்தல் 56.7பொன்னேரி கொசஸ்தலை, ஆரணியாற்று நீர் வழித்தடம், கரை சீரமைப்பு 30சோழவரம் ஏரி, கட்டுமான பணி 38.0பூந்தமல்லி தாலுகாவில் சில கால்வாய்கள் 10.9நேமம் ஏரி ஷட்டர்கள் சீரமைப்பு 12.2காஞ்சி, கெருகம்பாக்கம் அடையாறு ஆற்று கால்வாய் துார்வாரும் பணி 1.7



'ரிங் பைப் லைன்' திட்டம்

சென்னையில் குடிநீர் வினியோகத்தை சீராக்கும்நடவடிக்கை குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறியதாவது:சென்னையில் வரி வசூல் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகள் சரியாக இருக்கிறதா, கட்டடத்தின் அளவுகள் சரியாக உள்ளதா, கூடுதலாக இருக்கிறதா என, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.அத்துடன், 'பெரிய கட்டடங்களின் உரிமையாளர்களிடம் முதலில் வரிவசூல் செய்யுங்கள்; அதற்குபின் மக்களிடம் சென்று வரிவசூல் செய்து கொள்ளலாம்' என அறிவுறுத்தப்பட்டதன் காரணமாக, யாருக்கும் சிரமமில்லாமல், மாநகராட்சி வருவாய் துறை வரி வசூலித்து வருகிறது.கடந்தாண்டு, இதே நாளில் வசூலிக்கப்பட்ட வரியைவிட, இந்தாண்டு 8 - 10 கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. நிதி சம்பந்தமான நடவடிக்கைகளை சட்டப்படி எவ்வாறு செய்ய வேண்டுமோ, அவ்வாறு தான் செய்யப்பட்டு வருகிறது.சென்னை மாநகரம் பரந்து விரிந்துள்ளது. இதில் வீராணம், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட ஏரிகளில் இருந்து, நீராதாரங்களில் இருந்தும் வரும் தண்ணீரை சுத்தப்படுத்தி அனுப்பும் போது, சில இடங்களில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், சில பகுதிகளுக்கு தண்ணீர் வராத சூழ்நிலை ஏற்படுகிறது.எனவே, சென்னையை சுற்றி அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் தங்கு தடையின்றி கொண்டு செல்லும் வகையில், 'ரிங் ரோடு' போடுவது போல், 'ரிங் பைப் லைன்' திட்டம் செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்திட்டம் நடைமுறைப்படுத்தினால், தண்ணீர் சீராக வினியோகிக்கும் பொறுப்பை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்.



- -நமது நிருபர் -






      Dinamalar
      Follow us
      Arattai