/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வஞ்சுவாஞ்சேரி சிறுபாலத்தில் குவிக்கப்படும் குப்பை கழிவு
/
வஞ்சுவாஞ்சேரி சிறுபாலத்தில் குவிக்கப்படும் குப்பை கழிவு
வஞ்சுவாஞ்சேரி சிறுபாலத்தில் குவிக்கப்படும் குப்பை கழிவு
வஞ்சுவாஞ்சேரி சிறுபாலத்தில் குவிக்கப்படும் குப்பை கழிவு
ADDED : ஜூன் 14, 2025 01:06 AM

ஸ்ரீபெரும்புதுார்:வஞ்சுவாஞ்சேரி சிறுபாலத்தில் குவிக்கப்படும் குப்பை கழிவுகளால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
வண்டலுார் --- வாலாஜாபாத் நெடுஞ்சாலை வழியே, ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், வண்டலுார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையோரம், படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரியில் உள்ள சிறுபாலத்தில் அதிக அளவில் குப்பை குவிந்துள்ளது.
வஞ்சுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் உணவங்களில் இருந்து வெளியேறும் உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் இரவு நேரங்களில் மூட்டை மூட்டையாக கொட்டுகின்றனர். மழைநீர் செல்லும் சிறுபாலத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையால், மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி, இடையூறு ஏற்படுகிறது.
மேலும் இப்பகுதியில் எற்படும் கடும் துர்நாற்றத்தால், வாகனங்களில் செல்பவர்கள் நோய் தொற்று அபாயத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலையோரம் உள்ள மழைநீர் வழித்தடத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து, மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.