/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பள்ளி மாணவர்கள் சிலம்ப போட்டியில் தங்கம்
/
அரசு பள்ளி மாணவர்கள் சிலம்ப போட்டியில் தங்கம்
ADDED : ஜன 26, 2024 01:17 AM
திருவொற்றியூர்:மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி, ராணிப்பேட்டையில் கடந்த 18ல் நடந்தது.
இதில், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் ஜனார்த்தனன் பங்கேற்றார்.
சிறப்பாக விளையாடிய அவர், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
பின், மாநில அளவிலான போட்டியில், மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அதேபோல், மாணவியர் பிரிவில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீகா, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இந்நிலையில், மாவட்ட, மாநில அளவில் சிலம்ப போட்டியில் தடம் பதித்த, அரசு பள்ளி மாணவ - மாணவியரை, பள்ளி தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர் நவநீதகிருஷ்ணன், கலை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

