/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
1,401 ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு கோரிக்கை இருந்தால் வரும் 25க்குள் தெரிவிக்கலாம்
/
1,401 ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு கோரிக்கை இருந்தால் வரும் 25க்குள் தெரிவிக்கலாம்
1,401 ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு கோரிக்கை இருந்தால் வரும் 25க்குள் தெரிவிக்கலாம்
1,401 ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு கோரிக்கை இருந்தால் வரும் 25க்குள் தெரிவிக்கலாம்
ADDED : செப் 18, 2025 11:06 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,401 ஓட்டுச்சாவடிகளின் வரைவு பட்டியலை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, அனைத்து கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். கோரிக்கை இருந்தால், வரும் 25ம் தேதிக்குள், அரசியல் கட்சியினர் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும்.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, வரைவு ஓட்டுச்சாவடி மையங்கள் இடம் மாற்றம், பெயர் மாற்றம், புதிய ஓட்டுச்சாவடி அமைப்பதற்கு ஏதுவாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,401 வரைவு ஓட்டுச் சாவடிகளின் பட்டியலை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.
இது தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அலுவலர்களுக்கு ஓட்டுச்சாவடி சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தயார் செய்வதற்கு முன்பாக, ஓட்டுச்சாவடி மையங்களை நேரடியாக களப்பணி செய்து உறுதி செய்ய வேண்டும்.
அங்கு, குடிநீர், கழிப்பறை, சாய்வு தளம், மின்சார வசதி மற்றும் கட்டட உறுதித்தன்மை உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் அனைத்து ஓட்டுச்சாவடிகளும், 1,200க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ள பாகங்களை இரண்டு பாகங்களாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அனைத்து ஓட்டுச்சாவடிகளும் இருபாலர்களுக்கான ஓட்டுச்சாவடிகளாக இருப்பதை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஓட்டுச்சாவடி மையங்கள் இடம் மாற்றம், பெயர் மாற்றம், புதிய ஓட்டுச்சாவடி அமைப்பது தொடர்பான கோரிக்கை ஏதேனும் இருப்பின், மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலரிடம், வரும் 25ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக, அரசியல் கட்சியினர் வழங்க வேண்டும்.