/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தங்கானுாரில் சேவல் சண்டை போட்டி 'ஆடுகளம்' சேவலும் களமிறங்கியது
/
தங்கானுாரில் சேவல் சண்டை போட்டி 'ஆடுகளம்' சேவலும் களமிறங்கியது
தங்கானுாரில் சேவல் சண்டை போட்டி 'ஆடுகளம்' சேவலும் களமிறங்கியது
தங்கானுாரில் சேவல் சண்டை போட்டி 'ஆடுகளம்' சேவலும் களமிறங்கியது
ADDED : ஜன 28, 2024 12:01 AM

திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த தங்கானுாரில் நேற்று துவங்கிய வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டியில், நடிகர் தனுஷ் நடித்த, ஆடுகளம் திரைப்படத்தில் மோதிய சேவல் உட்பட பல மாநில சேவல் ரகங்கள் களமிறங்கின.
திருவள்ளூர் மாவட்டம், தங்கானுாரில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, ஆண்டு தோறும் வெற்றுக்கால் சேவல் சண்டை நடைபெறுகிறது.
தமிழகத்தில் அழியும்தருவாயில் உள்ள சண்டை சேவல் இனத்தை பாதுகாக்கும் விதமாக, இந்த போட்டியை கிராம இளைஞர்கள் நடத்தி வருகின்றனர்.
சேவல்கள் காலில் கத்தி கட்ட தடை விதித்து, கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து, போலீஸ் பாதுகாப்புடன் சேவல் சண்டை நடத்த, ஐகோர்ட் அனுமதி வழங்கியது. 1,000 சேவல்கள் பங்கேற்கும் வகையில், தங்கானுார் கிராமத்தில் பெரிய களம் தயார் செய்யப்பட்டு, நேற்று காலை போட்டிகள் துவங்கின.
இப்போட்டியில், தமிழகம், புதுவை மற்றும் மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து, சேவல்களுடன் இளைஞர்கள் குவிந்தனர்.
நடிகர் தனுஷ் நடித்த, ஆடுகளம் திரைப்படத்தில் மோதிய சண்டை சேவல் உட்பட 700க்கும் மேற்பட்ட சேவல்கள்களத்தில் மோதி வருகின்றன.
இப்போட்டியில் ஜாவா, கருப்பு வால், யாகுத், பீலா, தும்மர், சீதா, நுாரி, காதர் பேட்டை மாதிரி, படிவ கல்வா உள்ளிட்ட பல்வேறு ரக சேவல்கள்களத்தில் மோதி வருகின்றன.
இன்றும் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு சேவலும், மூன்று சுற்றுகளில் போட்டியிட்டு, வெற்றி பெறும் சேவல்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் உள்ளிட்ட பரிசு வழங்கப்பட உள்ளதாக, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.