/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாமல்லபுரம் பகுதியில் பொழிந்த மூடுபனியில், பனித்திரை சித்திரமாக, சிற்பங்கள் வசீகரித்தன.

ADDED : ஜன 16, 2024 11:17 PM

மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில் நேற்று காலை 9:30 மணிக்கு பிறகும் கூட மூடுபனி நீடித்தது. அதன்பின், சூரிய வெளிச்சம் வெளிப்பட்டது.
மூடுபனியில் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, கலங்கரை விளக்கம் ஆகியவை சித்திரமாக காட்சியளித்தன.
மதுராந்தகம், மாண்டூர், கருங்குழி, மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், வழக்கத்துக்கு மாறாக, நேற்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. கிராமப்புறங்களிலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. பனிமூட்டம் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி, குறைந்த வேகத்தில் சென்றன. பனிப்பொழிவு காரணமாக ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலையில் பனி மூட்டத்தால், சாலையில் மறைந்து வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இச்சாலைகளில் காலை 7:00 மணி வரை பனி மூட்டம் காணப்பட்டது.