ADDED : ஜன 16, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரமங்கலம்,
மதுரமங்கலம் அடுத்த, கண்ணன்தாங்கல் கிராமத்தில், 108 சக்தி பீட சொர்ண காமாட்சி கோவில் உள்ளது. இங்கு, அனைத்து தரப்பு மக்கள் நலம் மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என, சிறப்பு யாகம் நடைபெற உள்ளது.
நேற்று முன் தினம் கோ-பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் யாகம் துவங்கியது. நேற்று, கலச பூஜை, லலிதாஸஹஸ்ர நாமம் பாராணயம் செய்யப்பட்டது.
இன்று, குரு வந்தனம், மங்கலஹாரத்தி நடைபெற உள்ளது. நாளை காலை, கோ பூஜை, குரு வந்தனம் நடைபெற உள்ளது. மாலை 6:40 மணிக்கு ரதப் புறப்பாடு நடைபெற உள்ளது.

