sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி ஆதி காமாட்சியம்மன் கோவில் மே மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு

/

காஞ்சி ஆதி காமாட்சியம்மன் கோவில் மே மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு

காஞ்சி ஆதி காமாட்சியம்மன் கோவில் மே மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு

காஞ்சி ஆதி காமாட்சியம்மன் கோவில் மே மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு


ADDED : ஜன 18, 2024 11:01 PM

Google News

ADDED : ஜன 18, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடாபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிக்காக, 2022ம் ஆண்டு, செப்., 1ல் பாலாலயம் நடந்தது.

அதை தொடர்ந்து கோவில் உட்புறம் மற்றும் வெளிப்பிரகாரம் முழுதும் 70 லட்சம் ரூபாயில் கருங்கல் தரைதளம் அமைக்கப்பட்டு உள்ளது.

மஹா மண்டபத்தின் மேல்தளத்தில் 15 லட்சத்தில் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

மேலும், 10 லட்சத்தில் இதர திருப்பணிகள் நடந்துள்ளன.

கோவில் முன்புறம், 71 லட்சம் ரூபாயில், கருங்கற்களால் ஆன கலைநுணுக்கத்துடன் கூடிய அழகிய நுழைவாயில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை ஹிந்து சமய அறநிலையத் துறையும் வழங்கியுள்ளது.

கருங்கல் நுழைவு வாயில், கோவில் கொடிமரம், கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது.

விஸ்வகர்மா, காயத்ரி சன்னிதி அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், லட்சதீபம் ஏற்றும் பித்தளை பலகை, கோவில் திருக்குடை, சிம்ம வாகனம் மூலஸ்தானத்தில் கிரானைட் அகற்றி கருங்கல் பதித்தல், மடபள்ளிக்கு கதவு அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் செய்ய வேண்டியுள்ளது.

எனவே, திருப்பணிக்கு நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம்.

திருப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளோம் என, அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us