/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவூர் கூட்டுறவு வங்கி ரூ.18.94 லட்சம் வழங்கல்
/
கோவூர் கூட்டுறவு வங்கி ரூ.18.94 லட்சம் வழங்கல்
ADDED : செப் 30, 2025 01:34 AM

காஞ்சிபுரம்;கோவூர் நகர கூட்டுறவு வங்கியின் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிக்குரிய காசோலை, காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளரிடம் நேற்று வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், கோவூர் நகர கூட்டுறவு வங்கியில், 2022- --- 23ம் ஆண்டு ஈட்டிய லாபத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய, ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி என மொத்தம், 18 லட்சத்து 94,274 ரூபாய்க்கான காசோலையை, கோவூர் நகர கூட்டுறவு வங்கியின் சார் பதிவாளர் ராஜசேகரன், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீயிடம் நேற்று வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் பிரேம்குமார், காஞ்சிபுரம் ஒன்றிய கூட்டுறவு சங்க மேலாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

