/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செல்வஜோதி விநாயகருக்கு வரும் 11ல் கும்பாபிஷேகம்
/
செல்வஜோதி விநாயகருக்கு வரும் 11ல் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 06, 2024 04:28 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் தாயார்குளம் தெருவில் உள்ள செல்வஜோதி விநாயகர் கோவிலில், 1955; 1990ல் கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிலையில், இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகிகள், திருப்பணி குழுவினர், தாயார்குளம் தெருவினர் முடிவு செய்தனர்.
அதன்படி, பல்வேறு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, 34 ஆண்டுகளுக்குப்பின், வரும் 11ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவையொட்டி வரும் 9ல், மாலை 5:00 மணிக்கு ஓதுவார் பன்னீர்செல்வம் பஞ்சபுராணம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார்.
பிப்., 11ல், காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 8:30 மணிக்கு, விமானம் மற்றும் மூலஸ்தானத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கிறார்.
காலை 10:30 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்க உள்ளது.