/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'பெற்றோரை கொண்டாடுவோம்' படப்பையில் 28ல் மாநாடு
/
'பெற்றோரை கொண்டாடுவோம்' படப்பையில் 28ல் மாநாடு
ADDED : பிப் 25, 2024 02:19 AM
குன்றத்துார்,:பள்ளிக் கல்வித் துறை சார்பில், 'பெற்றோரை கொண்டாடுவோம்' என்ற மாநாடு படப்பையில் 28ம் தேதி நடைபெறுகிறது.
பள்ளிக் கல்வித் துறை, மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து மாணவர்கள், ஆசிரியர்கள், மேம்பாட்டுக்காக நடத்தும் 'பெற்றோரை கொண்டாடுவோம்' என்ற மாநாடு நிகழ்ச்சி தமிழகத்தில் மண்டல வாரியாக நடைபெறுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம்மண்டல மாநாடு வரும் 28ம் தேதி, குன்றத்துார் அருகே, படப்பை அடுத்த, கரசங்கால் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி இந்த மாநாட்டை துவக்கி வைக்கிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
ஆறு மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள்என ஆயிக்கணக்கானோர்பங்கேற்க உள்ளதால், இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறையினர் செய்து வருகின்றனர்.