/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காயலான் கடையில் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
/
காயலான் கடையில் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
ADDED : ஜன 09, 2024 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்,:துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 50. இவர், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே காயலான் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த மர்ம நபர், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக விசாரித்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், ஸ்ரீபெரும்புதுார், வன்னியர் தெருவைச் சேர்ந்த சரவணன், 21; என்பவரை நேற்று கைது செய்தனர்.

