/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொய்யாமுடி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
/
பொய்யாமுடி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
பொய்யாமுடி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
பொய்யாமுடி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
ADDED : ஜூன் 22, 2025 02:05 AM

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் பொய்யாமுடி விநாயகர் கோவிலில் நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
பெரிய காஞ்சிபுரம் பாண்டவதுாத பெருமாள் கோவில் தெருவில் உள்ள பொய்யாமுடி விநாயகர் கோவில், மஹா கும்பாபிஷேகம், கடந்த மாதம் 4ம் தேதி விமரிசையாக நடந்தது.
தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று, மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. இதில், காலை 7:00 மணிக்கு 108 கலசபூஜை, 108 சங்கு பூஜை, மஹா பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்தது.
காலை 8:45 மணிக்கு கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து, 108 பால்குடம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, விநாயகருக்கு பால் அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு மூலவர் விநாயகர் சந்தனகாப்பு, சந்தவெளி அம்மன் பச்சை காப்பு, ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு, வீரபாகு விபூதி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உத்சவசம் விநாயகர் விசேஷ அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.