/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாத்துார் ஏரி நீர் உணவு கழிவுகளால் மாசு
/
மாத்துார் ஏரி நீர் உணவு கழிவுகளால் மாசு
ADDED : ஜன 26, 2024 12:52 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 350 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் செய்து வருகின்றனர்.
அப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய இந்த ஏரி, தொழிற்சாலைகள் பெருக்கத்திற்கு பின், முறையான பராமரிப்பின்றி உள்ளது.
இந்த நிலையில், ஒரகடம் தொழிற்பேட்டையில் 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு பெரும்பாலும் தனியார் உணவகங்கள் வாயிலாக உணவு வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு வழங்கப்படும் உணவில், வீணாகும் உணவுக் கழிவுகளை இந்த ஏரியில் அத்துமீறி கொட்டுகின்றனர். இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியை ஆய்வு செய்து, உணவுக் கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

