/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மொபைல் போன் பழுது நீக்கும் முகாம்
/
காஞ்சியில் மொபைல் போன் பழுது நீக்கும் முகாம்
ADDED : ஜூன் 23, 2025 02:03 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக மொபைல்போன் பழுது நீக்கும் முகாம், நடந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சன்னிதி தெருவில் உள்ள இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையத்தில், 25 பேர், 26 நாட்களாக மொபைல்போன் பழுது நீக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இம்மாணவர்கள் பயிற்சி மைய வாசலில் பொதுமக்களுக்கு இலவசமாக மொபைல்போன் பழுது நீக்கும் முகாமை நடத்தினர்.
முகாமிற்கு மைய இயக்குநர் ஆர்.உமாபதி தலைமை வகித்தார். நிதி சார் கல்வி ஆலோசகர் அரங்கமூர்த்தி முன்னிலை வகித்தார்.
மொபைல்போன் பயிற்சியாளர் தமிழ்வாணி வரவேற்றார். வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் என, 156 பேர், முகாமில் தங்களது மொபைல்போன்களை இலவசமாக பழுது நீக்கி பயன் பெற்றனர்.
தொடர்ந்து, சர்வதேச யோகா தினத்தையொட்டி பயிற்சி மையத்தில் பயின்ற 57 மாணவ - மாணவியயர் மையத்தின் யோகா மாஸ்டர் ஆறுமுகம் தலைமையில் யோகா பயிற்சி செய்தனர். நிறைவாக பயிற்சியாளர் ரூபினி நன்றி கூறினார்.