/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாய் நீரில் கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
/
வடிகால்வாய் நீரில் கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
வடிகால்வாய் நீரில் கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
வடிகால்வாய் நீரில் கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
ADDED : ஜன 26, 2024 01:13 AM

செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு எல்லப்பா நகர், 3வது தெருவில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மகளிர் கிளை அமைந்துள்ள பகுதியில் இரு மாதங்களுக்கு முன், திறந்தவெளி மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
இக்கால்வாயில் சேகரமாகும் மழைநீர், காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலையோரம் உள்ள வடிகால்வாயுடன் இணையும் வகையில் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இருப்பினும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய் தாழ்வாக உள்ளதால், வந்தவாசி கால்வாயுடன் இணைப்பு ஏற்படுத்தவில்லை.
இதனால், இக்கால்வாயில் உள்ள மழைநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால், அதில் கொசு மற்றும் புழுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது.
இதில், 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியானால், அப்பகுதியில் டெங்கு பரவும் சூழல் உள்ளதாக இப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, எல்லப்பா நகரில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாயில் மழைநீர் தேங்காமல் வெளியேறும் வகையில் கால்வாய் சீரமைக்க வேண்டும், கால்வாய்க்கு கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

