/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மிஸ்டர் தமிழ்நாடு' ஆணழகன் போட்டி கட்டுடலை காட்டி அசத்திய 300 வீரர்கள்

ADDED : பிப் 23, 2024 11:02 PM

சென்னை:ஜேப்பியார் பல்கலை மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் பாடிபில்டிங் சங்கம் சார்பில், 52வது ஜூனியர் மாநில பாடி பில்டிங் போட்டி, செம்மஞ்சேரி பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கியது.
இதில், ஜூனியர் இருபாலருக்கும், மாஸ்டர் பிரிவில் ஆடவருக்கு மட்டும் 'மிஸ்டர் தமிழ்நாடு' போட்டிகள் நடக்கின்றன. 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இருந்து, எடை வாரியாக பல்வேறு வகையாக நடக்கின்றன.
நேற்று காலை, எடை சரிபார்க்கப்பட்டு, மதியம் 1:00 மணிக்கு போட்டிகள் துவங்கின. அனைத்து பிரிவிலும், சென்னை உட்பட பல மாவட்டங்களில் இருந்து, 300க்கு மேற்பட்டோர் பங்கேற்று, கட்டுடலை காட்டி அசத்தினர்.
இதில், 55 கிலோ எடை பிரிவில், அனைத்துச் சுற்றுகள் முடிவில், சேலத்தைச் சேர்ந்த முகிலன் முதலிடம் பிடித்தார்.
கன்னியாகுமரி அனுமந்தன், சேலம் கேசவராஜ் மற்றும் தயாநிதி, விழுப்புரம் விஷ்ணு ஆகியோர் முறையே, அடுத்தடுத்த இடங்களை வென்றனர். தொடர்ந்து மற்ற பிரிவுகளிலும் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனையருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் தேர்வானோர், இன்று நடக்கும் தேசிய 'மிஸ்டர் இந்தியா' போட்டியில் பங்கேற்க உள்ளதாக, பல்கலையின் உடற்கல்வித்துறை இயக்குனர் ஓம்பிரகாஷ் தெரிவித்தார்.