/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த நெல் கொள்முதல் நிலையம்
/
மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த நெல் கொள்முதல் நிலையம்
மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த நெல் கொள்முதல் நிலையம்
மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த நெல் கொள்முதல் நிலையம்
ADDED : செப் 29, 2025 12:54 AM

உத்திரமேரூர்:நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, ஆனைப்பள்ளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது.
உத்திரமேரூர் அடுத்த, ஆனைப்பள்ளம் கிராமத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, ஆனைப்பள்ளம், சோமநாதபுரம், கல்லமா நகர், காக்கநல்லுார், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்து வந்தனர்.
கடந்த 10 நாட்களாக நெல் கொள்முதல் நிலையம் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வந்தது.
இதனால், விவசாயிகள் விற்பனைக்காக குவியலாக கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல், மழையில் நனைந்து முளைவிடவும் ஆரம்பித்தது. இதனால், ஆவேசமடைந்த விவசாயிகள் ஆனைப்பள்ளம் நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 25ம் தேதி, துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஆனைப்பள்ளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நெல் கொள்முதல் நிலை யம் மீண்டும் செயல்பட துவங்கியது.

